பொன்னொளிப் பித்தரிடம் ஒரு சீடன் கேட்டான், "என் அகத்தில் எதுவுமே இல்லை. என்ன செய்வது?"

"எல்லாவற்றையும் வெளியே கொட்டி விடு," என்றார் பொன்னொளிப் பித்தர்.

"என்ன இது! நான்தான் என்னுள் ஒன்றுமே இல்லை என்கிறேனே?" என்றான் சீடன் .

"அப்படியானால், எல்லாவற்றையும் சுமந்து கொண்டேயிரு!" என்றார் பொன்னொளிப் பித்தர்.

(மறுஆக்கம் செய்யப்பட்ட சென் கதை)

ஒரு நாள் இரவு பொன்னொளிப் பித்தர் லைப் டிவைன் வாசித்துக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் கத்தியை வைத்த திருடன் ஒருவன் "பணத்தை எல்லாம் கொடு," என்றான்.

"பணத்தைக் கேட்கும்போது கத்தியை எல்லாம் ஏனப்பா கழுத்தில் வைக்கிறாய்? எல்லா பணமும் அலமாரியில்தான் இருக்கிறது. எடுத்துக் கொள்," என்றார் பொன்னொளிப் பித்தர்.

திருடன் எல்லா பணத்தையும் எடுக்கும் போது "தம்பி, நாளைக்கு வரி கட்ட வேண்டும். நூறு ரூபாய் வைத்து விட்டுப் போ,"என்றார். 

பொன்னொளிப் பித்தரின் மடத்தில் ஒரு சீடன் திருடி விட்டான். மற்ற சீடர்கள் அவனைப் பிடித்து பித்தரிடம் இழுத்து வந்தனர். "சரி, நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார் பொன்னொளிப் பித்தர்.  ஆனால் திருடியவனை ஒன்றும் செய்யவில்லை.

சில நாட்கள் கழித்து அதே சீடன் மீண்டும் திருடினான். மற்ற சீடர்கள் அவனைப் பிடித்து பித்தரிடம் மீண்டும் இழுத்து வந்தனர். "சரி, நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார் பொன்னொளிப் பித்தர்.  ஆனால் திருடியவனை ஒன்றும் செய்யவில்லை.

பேரான்மா சில சமயங்களில் மனிதர்களின் நடுவே நடமாடுவதுண்டு. அப்போது மனித ஜீவனின் மேற்பரப்பு நீரோட்டத்தில் இறைவனின் மூச்சோட்டம் மிதந்து செல்லும். பேரான்மா ஓய்வெடுக்கும் சமயங்களும் உண்டு. அப்போது மனிதர்கள் தங்கள் சொந்த அகந்தையின் வலிமையை, அல்லது வலிமையின்மையை, அனுசரித்து செயல்பட வேண்டிய நிலைக்கு விடப்படுவார்கள். முதலாவது காலக்கட்டங்களில் சிறுமுயற்சிகூட பெரும்பலன்களைத் தந்து, ஊழை மாற்றும். இரண்டாவது காலவெளிகளிலோ, சிறுபலனை உருவாக்க ஏராளமான உழைப்பு தேவைப்படும். பின்னது முன்னதை ஆயத்தப்படுத்துகிறது என்பது மெய்யாக இருக்கக்கூடும்.

மனித குலத்தின் ஒளிமயமான எதிர்காலம் இன்றைய குழந்தைகளின் கையில் இருக்கிறது .  

குழந்தைகள் பிரம்மத்தைப் போலவே படைப்பாற்றலும், கற்பனாசக்தியும் மிகுந்தவர்கள். குழந்தைகள்  கதைகளை நேசிப்பவர்கள். கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லும் குழந்தையை இதுவரை நான் சந்தித்ததில்லை.

காலத்தைக் கடந்த பண்புகளையும், நெறிகளையும், விழுமியங்களையும் குழந்தைகளுக்கு சொல்லித் தரும் கதைகளை அவர்கள் கேட்டு அல்லது வாசித்து, பின்பற்றினால் அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

ஸ்ரீ அரபிந்தோ, மதர்  ஆகியோரின் கருத்துக்களை நான் எழுதியிருக்கும் குழந்தைக் கதைகள் வெளிப்படுத்துகின்றன.

ஒருநாள் மதிய உணவு வேளையில் சந்துரு “எனக்கு போளி ரொம்ப பிடிக்கும். எத்தனை வேண்டுமானாலும் ஆசையோடு சாப்பிடுவேன்,” என்று ஆனந்தியிடம் கூறினான்.

“எனக்கும் போளி ரொம்ப பிடிக்கும். நானும் சாப்பிடுவேன்,” என்றாள் ஆனந்தி.

அப்போது அங்கே வந்த கமலா டீச்சர், “நாம் முன்னேற வேண்டுமானால் ஆசையை விட வேண்டும். அவசியத்திற்காக எதையும் செய்ய வேண்டும்,” என்றார்.

“ஆசையை எப்படி விடுவது?,” என்று கேட்டான் அசட்டு சந்துரு.

பொன்னொளிப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த கோபிக்கு பேசும்போது வார்த்தை திக்கித் திக்கி வரும். ஏனென்றால் அவனுக்கு நாக்கில் ஏதோ சின்ன பிரச்சனை.

கோபிக்கு உதவுவதாக நினைத்துக் கொள்ளும் சந்துரு, அவன் பேச ஆரம்பித்தால், “நீ பேசாதே, நீ என்ன சொல்ல வருகிறாய் என்று நான் மற்றவர்களுக்குச் சொல்கிறேன்,” என்று கூறுவான். கோபியைப் பேசவே விட மாட்டான்.

ஒரு நாள் சந்துரு பேசும்போது தவறான வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தினான். அதன் அர்த்தம் கூட அவனுக்குத் தெரியாது! உடனே கோபி திக்கியபடியே சொன்னான். “நாமெல்லாம் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் பேசக் கூடாது,” என்றான்.

ஜனாதிபதியிடம் பரிசு வாங்க அசட்டு சந்துரு, கமலா டீச்சரோடு டெல்லிக்குப் போனான். அவனுக்கு புதிய உடைகளோடு, புதிய சப்பாத்துக்களையும் (ஷூ) அவன் அப்பா வாங்கித் தந்திருந்தார்.

போன இடத்தில் சந்துருவிற்கு கால்களில் கட்டி வந்துவிட்டது. அவனால் ஷூ போடமுடியவில்லை. "எல்லோரும் ஷூ போட்டுக் கொண்டு அழகாக வருவார்கள். நான் மட்டும் ஷூ போடாமல் போகவேண்டுமே! "  என்று அழுதான்.

கமலா டீச்சர், " ஷூ விஷயத்தில் முன்பு எப்போதாவது விஷமம் பண்ணியது உண்டா?" என்று கேட்டார்.

பொன்னொளிப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த சந்துரு ஒரு நாள் பெரிய மூக்குக் கண்ணாடி போட்டான். மற்ற குழந்தைகள் அவனை கேலி செய்ததால் அழுதான்.
 
"மிஸ், எனக்கு மட்டும் ஏன் கண் கெட்டு பலவீனமாகி விட்டது?" என்று அழுது கொண்டே கமலா டீச்சரிடம் கேட்டான்.

அவனை அன்போடு சமாதானப் படுத்திய கமலா டீச்சர், "சந்துரு  கண்ணா, பலவீனம் என்று எதுவுமே இல்லை. எல்லாமே பலம்தான். தேவையான நேரத்தில் பலவீனம் பலம் என்பது புரியும்," என்றார்.

ஒரு நாள் கமலா டீச்சர் எல்லா குழந்தைகளையும் சுற்றுலாவிற்காக ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்றார்.

வசந்த் இன்னும் சிறிது நேரத்தில் கீதாவை அவள் அலுவலகத்தில் வந்து சந்திப்பதாகத் தொலைபேசியில் கூறி இருந்தான். மூன்று வருடங்களுக்கு பின் அவள் அவனைப் பார்க்கப் போகிறாள்.

தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, தன் அலுவலக மேஜை அறையில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த வசந்த்தின் புகைப்படத்தைத் திருட்டுத்தனமாக எடுத்துப் பார்த்தாள். வசந்த் அதில் உயிரோடு நேரிலேயே இருப்பது போல அவளுக்குத் தோன்றியது. அவனது முகத்தை இலேசாக வருடிக் கொடுத்தாள். அவள் மேனியெல்லாம் சிலிர்த்தது.