ஜன்னல் வழியே வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரகுவின் பின்னால் சத்தமின்றி வந்து நின்ற சுபா, "திரும்பிப் பாருங்களேன்," என்றாள்.
தன்னை தன் கணவனுக்காக கவனமாக அலங்கரித்துக் கொண்டு, புன்னகையோடு நின்றிருந்த புத்தம்புது மனைவியைத் திரும்பிப் பார்த்த ரகு உற்சாகமானான். சுபாவின் இடையைத் தன் வலது கையால் வளைத்துத் தன்னருகே இழுத்துக் கொண்ட ரகு, "தேவதையைப் பற்றிக் கதைகளில் படித்திருக்கிறேன். உன்னைப் பற்றித்தான் அந்தக் கதைகளில் எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்," என்றான்.