பேரான்மா சில சமயங்களில் மனிதர்களின் நடுவே நடமாடுவதுண்டு. அப்போது மனித ஜீவனின் மேற்பரப்பு நீரோட்டத்தில் இறைவனின் மூச்சோட்டம் மிதந்து செல்லும். பேரான்மா ஓய்வெடுக்கும் சமயங்களும் உண்டு. அப்போது மனிதர்கள் தங்கள் சொந்த அகந்தையின் வலிமையை, அல்லது வலிமையின்மையை, அனுசரித்து செயல்பட வேண்டிய நிலைக்கு விடப்படுவார்கள். முதலாவது காலக்கட்டங்களில் சிறுமுயற்சிகூட பெரும்பலன்களைத் தந்து, ஊழை மாற்றும். இரண்டாவது காலவெளிகளிலோ, சிறுபலனை உருவாக்க ஏராளமான உழைப்பு தேவைப்படும். பின்னது முன்னதை ஆயத்தப்படுத்துகிறது என்பது மெய்யாக இருக்கக்கூடும்.