வசந்த் இன்னும் சிறிது நேரத்தில் கீதாவை அவள் அலுவலகத்தில் வந்து சந்திப்பதாகத் தொலைபேசியில் கூறி இருந்தான். மூன்று வருடங்களுக்கு பின் அவள் அவனைப் பார்க்கப் போகிறாள்.
தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, தன் அலுவலக மேஜை அறையில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த வசந்த்தின் புகைப்படத்தைத் திருட்டுத்தனமாக எடுத்துப் பார்த்தாள். வசந்த் அதில் உயிரோடு நேரிலேயே இருப்பது போல அவளுக்குத் தோன்றியது. அவனது முகத்தை இலேசாக வருடிக் கொடுத்தாள். அவள் மேனியெல்லாம் சிலிர்த்தது.