பிரம்மபுரம் என்ற ஒரு ஊர் இருந்தது. அங்கு பொன்னொளிப் பித்தர் என்ற ஒரு அப்பாவி ஆன்மீகவாதி இருந்தார். அவர் பொன்னொளி மடம் என்ற பூரண யோக மடத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார்.
அவருக்கு உதவியாக அவருடனே மக்கானந்தர், கமலக்கூத்தர் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவருமே பொன்னொளிப் பித்தரின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டவர்கள்.
மக்கானந்தருக்கு ஆன்மீகம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆன்மீக முறைகளை பின்பற்ற விரும்புவார். எல்லோருக்கும் நல்லவர். மிகவும் அப்பிராணி. கருணை மிகுந்தவர். ஆனால் நடைமுறை அறிவோ, லௌகீக சாமர்த்தியமோ சிறிதும் இல்லாதவர்.