மனித குலத்தின் ஒளிமயமான எதிர்காலம் இன்றைய குழந்தைகளின் கையில் இருக்கிறது .
குழந்தைகள் பிரம்மத்தைப் போலவே படைப்பாற்றலும், கற்பனாசக்தியும் மிகுந்தவர்கள். குழந்தைகள் கதைகளை நேசிப்பவர்கள். கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லும் குழந்தையை இதுவரை நான் சந்தித்ததில்லை.
காலத்தைக் கடந்த பண்புகளையும், நெறிகளையும், விழுமியங்களையும் குழந்தைகளுக்கு சொல்லித் தரும் கதைகளை அவர்கள் கேட்டு அல்லது வாசித்து, பின்பற்றினால் அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
ஸ்ரீ அரபிந்தோ, மதர் ஆகியோரின் கருத்துக்களை நான் எழுதியிருக்கும் குழந்தைக் கதைகள் வெளிப்படுத்துகின்றன.