கல்யாணத்தில் பொதுவாக முதல் நாள் நிச்சயதார்த்தம் அல்லது வரவேற்பு இருக்கும். மறுநாள் காலையில் கல்யாணம் நடக்கும். எனக்கும், ஜமுனாவிற்கும் கல்யாணம் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்யாணத்திற்கு முதல் நாள் மாலை வரை உற்சாகமாக எங்களோடு பேசிக் கொண்டிருந்த தாத்தா, ஏதோ ஒரு போன் வந்தபின் இறுக்கமாகி விட்டார். மதுரை மாமாவை தனியாக அழைத்து சென்று நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
மறுநாள் காலையிலும், கல்யாணத்தின் போதும் இறுக்கமாக, வேறேதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் தாத்தா.