மறுநாள் காலையில் கிளம்பி இரண்டு மணிக்கு மதுரை சென்றடைந்தேன். மீனாட்சி அம்மன் கோவிலருகே ஒரு விடுதியில் தங்கினேன். உடனே மாமா வீட்டிற்கு போக வேண்டும் என்று தோன்றினாலும் ஆறு மணி வரை காத்திருந்தேன்.
என்னிடம் புதிய சாம்பல் நிற கால்சட்டையும், வெள்ளையில் மெல்லிய நீல கட்டங்கள் போட்ட புதிய சட்டையும் இருந்தன. மடிப்பு கலையாமல் அவற்றை அணிந்து கொண்டு, பளபளப்பேற்றப்பட்ட காலணிகளை போட்டுக் கொண்டு மாமா வீட்டிற்கு கிளம்பினேன்.
கிழக்கு வாசல் கோபுரத்தை கடக்கும் போது கூடையில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் ‘இருநூறு பூ கொடு ‘என்று கேட்டுக் கொண்டிருந்த ஜமுனாவைப் பார்த்தேன்.