நாங்கள் சூளைமேடு வீட்டிற்கு வந்தபின், வீட்டை தினமும் சுத்தம் செய்யும் மல்லிகா முழு நேர வீட்டு வேலையாளாக மாறிவிட்டாள். நாங்கள் ஆங்கில செய்தித்தாள் மட்டுமே வாங்கினோம். தமிழ் செய்தித்தாளாக மல்லிகா இருந்தாள்.
தரையை துணியால் துடைத்தபடி ‘அக்கா, கனப்பாக்கம் மயானத்தில் பேய் நடமாட்டம் இருக்கிறது’ என்றாள் மல்லிகா.
உள்ளறையில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்த என்னை ‘கனப்பாக்கம், மயானம்’ என்ற சொற்கள் மல்லிகா சொல்லப் போவதை கவனிக்கத் தூண்டின.
‘உனக்கெப்படி தெரியும்?’ என்று கேட்டாள் ஜமுனா.