குளிருக்குப் பயந்து சூரியன் வெளி வரத் தயங்கிக் கொண்டிருந்த இருள் பிரியாத அதிகாலை நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது. பேப்பர் போடும் பையனை எதிர்பார்த்துக் கதவைத் திறந்த எனக்கு பகீரென்றது.
வாயாவி வள்ளியப்பன் வாயெல்லாம் பல்லாக கொண்டிருந்தார். இவர் என் மனைவியின் ஒன்று விட்ட சித்தப்பா. ஆனால், எல்லோரும் இவரை வாயாவி மாமா என்றுதான் அழைப்பார்கள்.