மறுநாள் மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. தாத்தா எழுதியிருந்தார். ஜமுனாவைத் தேடினேன். அவள் தாத்தாவின் சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தாள். அவள் வரும்வரை காத்திருந்தேன்.
‘படிக்கவில்லையா?’ என்றாள் ஜமுனா.
‘உனக்கு வந்த கடிதம்’ என்றேன்.
‘வாசித்து விட்டு என்னிடம் கொடுங்கள்’ என்றாள்
கடிதத்தை வாசித்து விட்டு அவளிடம் கொடுத்தேன். அவள் வாசித்தபின் மீண்டும் நான் வாசித்தேன்:
‘அனைவரின் அன்பிற்கும் உரிய ஜமுனாவிற்கு,
உன்னைத் தவிர வேறெவருக்கும் கடிதம் எழுதத் தோன்றவில்லை.